யாழில் காணாமல் போன மீனவரின் சடலம் கரையொதுங்கியது! (படங்கள்)

யாழ். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, மாதகல் கடற்பகுதியில் இன்றையதினம் ஆண் ஒருவரது சடலம் கரையொதுங்கியது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணம் பலாலி அன்ரனிபுரம் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற 54 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கடந்த 20.12.2022 அன்று காணாமல் போயிருந்தார். 

காணமல்போன கடற்றொழிலாளரை அப் பகுதி மக்கள் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

காணமல்போன கடற்றொழிலாளர் தொழிலுக்குச் சென்ற படகு கவிழ்ந்த நிலையில் அவரை தேடிச்சென்ற படகினால் கண்டுபிடிக்கப்பட்டு கரைக்கு கொண்டுவந்துள்ள நிலையில் காணமல்போன கடற்றொழிலாளரை தேடும் பணி இடம்பெற்று வந்தன.

இந்நிலையில் அவர் இன்றையதினம் மாதகல் கடலில் சடலமாக மீட்கப்பட்டார்.

மீட்கப்பட்ட சடலம் பிரதேச பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

இராயப்பு ரொபேட் கெனடி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது குறித்து இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ப்புடைய செய்தி:
Previous Post Next Post