புகையிரதம் மோதி விபத்து! இளைஞனும் யுவதியும் உயிரிழப்பு!!

தெஹிவளை ரயில் நிலையத்தில் அருகில் ரயில் பாதையை கடக்க முயற்சித்த இளைஞனும் யுவதியும் ரயில் மோதியதில் உயிரிழந்துள்ளனர்.

இவர்களுடன் இருந்த மற்றுமொரு இளைஞன் காயமடைந்து களுபோலவில் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 10 மணியளவில் கொழும்பு மருதானையில் இருந்து களுத்துறை நோக்கி சென்ற ரயிலில் இவர்கள் மோதுண்டுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், இளைஞனும் யுவதியும் உயிரிழந்துள்ளனர்.

அம்பாலங்கொட பிரதேசத்தை சேர்ந்த இவர்கள் தொழிற்நுட்ப கல்லூரியில் கல்வி கற்று வந்துள்ளனர். தெஹிவளை விலங்கியல் பூங்காவை பார்க்க சென்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
Previous Post Next Post