
வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த பால் மா ஏற்றிய வாகனம் திருத்த வேலைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவுஇயந்திரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
சாரதி உறங்கியதால் கட்டுப்பாட்டையிழந்த வாகனமே உழவு இயந்திர்த்துடன் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் கோபமடைந்த ஊர்மக்கள், சாரதியை தாக்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த இராணுவத்தினர் சாரதியும் அவருடன் வந்தவரையும் மீட்டு பொலிஸ் காவலில் வைத்துள்ளனர்.



