கொழும்பு விபசார விடுதியில் கைதான யாழ்., வவுனியா யுவதிகள் வெளியிட்ட சோகக்கதை!

நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து வந்து கொழும்பில் விபசாரத்தில் ஈடுபட்டு வந்த 7 இளம் யுவதிகள் அண்மையில் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

கைதான யுவதிகளின் வாக்குமூலங்கள் மனதை உருக்குவதாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியுளள்ன.

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் மஹரகம பிரதேசத்தில் நடத்தப்பட்ட இந்த விபசார நிலையத்தில் பணிபுரிந்த யுவதிகள் யாழ்ப்பாணம், வவுனியா, ஹந்தலை, நீர்கொழும்பு, கொச்சிக்கடை, பம்பரக்கலை, நாவலப்பிட்டி பகுதிகளை சேர்ந்தவர்கள்.

எங்கும் வேலை கிடைக்காத நிலையில், குடும்பத்தை கவனிப்பதற்காக அவர்கள் விபசாரத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்வதாக குறிப்பிட்டு, விபசாரத்தில் ஈடுபட்ட இந்த யுவதிகள், தமது குடும்பத்திற்கு பணம் அனுப்பி வந்தது தெரிய வந்துள்ளது.

எனினும், சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட அவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.
Previous Post Next Post