வடக்கு மற்றும் கிழக்கில் அனைத்து வர்த்தக நிர்வாக சேவைகளையும் முடக்கி முழுமையாக முன்னெடுக்கப்படும் நிர்வாக முடக்களின் போது முல்லைத்தீவு - யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்தின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று (25.04.2023) பதிவாகியுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் முழுமையான நிர்வாக முடக்கல் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அரச பேருந்துக்கள் சேவையில் ஈடுபட்டுள்ளன.
இதனால் முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் வைத்து உந்துருளியில் வந்த இருவர், சேவையில் ஈடுபட்ட அரச பேருந்தின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது பேருந்தின் முன் கண்ணாடி சேதமடைந்துள்ளதுடன் சாரதியும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு சாலையில் இருந்து செல்லும் அனைத்து அரச பேருந்துக்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.