கிளிநொச்சியில் அதிக மதுபோதையால் ஏற்பட்ட விபத்து! 4 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!!

புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கப்ரக வாகனமும் கிளிநொச்சியில் இருந்து தருமபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் நபரொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்று திங்கட்கிழமை (29-05-2023) மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தருமபுரம் பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான 36 வயதான தியாகராசா சஞ்சீவன் என்பவரே இவ்வாறு உயிழந்துள்ளார். காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அதிக மது போதையில் பயணித்ததாலே இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
Previous Post Next Post