கிளிநொச்சியில் காரில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு!

கிளிநொச்சி, உதயநகர் பகுதியில் காரில் பயணித்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கார் சாரதி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர் கிளிநொச்சி, உதயநகர் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர் மற்றும் இருவர் கனகபுரம் பகுதிக்கு காரில் சென்றபோது ஏற்பட்ட தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி, பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post