வெளிநாடொன்றில் உயிரிழந்த இலங்கைத் தமிழ்ப் பெண்! தகனம் செய்ய மறுத்த தமிழர்கள்!! உதவி வழங்கிய சீக்கியர்கள்!!! (வீடியோ)

இந்தோனேசியா அகதி முகாமில் ஈழ அகதிப் பெண் ஒருவர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளார். இந் நிலையில் உயிரிழந்த பெண்ணின் உடலை தமது தகன மையத்தில் எரிக்க அனுமதிக்க முடியாது என அங்குள்ள தமிழர்கள் மறுத்துள்ளனர்.

இதையடுத்து, இந்தோனிசியாவில் வாழும் சீக்கிய சமூகத்தினர் தமது தகன மையத்தில் இந்துப் பாரம்பரியங்களுடன், ஈழப் பெண்ணின் சடலத்தை தகனம் செய்ய முழு ஏற்பாடும். செய்துள்ளனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக பயணித்த ஈழத்தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களின் படகொன்று இந்தோனியாவில் தடுத்து நிறுத்தப்பட்டது. அதில் பயணம் செய்தவர்கள் இந்தோனேசியாவில் மெடான் நகரில், பெலவான் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் அசோக்குமார்- லலிதா தம்பதியினரும், அவர்களின் இரண்டு பிள்ளைகளும் அந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். லலிதா கடுமையான நீரிழிவு பாதிப்பு ஏற்பட்டு, போதிய மருத்துவ வசதிகள் கிடைக்காமல் நேற்று உயிரிழந்துள்ளார்.

இந்தோனேசியாவில் ஏராளமாக இந்திய தமிழ் மக்கள் நீண்டகாலமாக வசிக்கிறார்கள். லலிதாவின் இறுதிச்சடங்கை அங்குள்ள இந்து மக்களின் தகன மையமொன்றில் நடத்துவதற்கு அங்குள்ள ஈழத்தமிழர்கள் அணுகிய போது, ஈழ அகதியின் உடலை எமது தகன மையத்தில் தகனம் செய்ய முடியாது என அவர்கள் மறுப்பு தெரிவித்து விட்டனர் என அங்குள்ள ஈழத் தமிழர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, பல தசாப்தங்களாக, அங்கே வசித்து வரும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சீக்கிய சமூகத்தினரின் உதவியை ஈமக்கமிமர்கள் கோரியுள்ளனர்.

சீக்கியர்களின் தகன மையத்தில் தாயின் இறுதிச் சடங்கை அவரது 11 வயது மகன் செய்து முடித்துள்ளான்.
 
Previous Post Next Post