யாழ். இளைஞர் உட்பட 3 தமிழர்கள் நீர்கொழும்பு கடலில் மூழ்கி மரணம்!

நீர்கொழும்பு கடலில் நீராடிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் - சுன்னாகத்தைச் சேர்ந்த ஜெயதீஸ்வரன் ஜெயலக்ஸ்மன் (வயது 23), கொஸ்லாந்தையைச் சேர்ந்த சத்தியமூர்த்தி சிறிவிந்த் (வயது 21), டயகமவைச் சேர்ந்த வடிவேல் ஆனந்தகுமார் (வயது 23) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்றுப் பிற்பகல்(23.07.2023) ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், கடலில் நீராடிய நிலையில் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களுடன் நீராடச் சென்ற மற்றோர் இளைஞர் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதலில் உயிரிழந்த நிலையில் மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post