கனடாவில் 16 ஆவது மாடியிலிழந்து குதித்து உயிர்மாய்த்த யாழ்.இளைஞன்!

கனடாவில் குடும்பத்துடன் வசித்து வந்த வடமராட்சி வல்வெட்டித்துறை தீருவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த இளைஞர் தற்கொலை செய்யும் நோக்கத்துடன் 16 வது மாடியிலிருந்து குதிக்கும் போது கீழே இருந்த கனடா நாட்டைச் சேர்ந்தவர் மீது விழுந்துள்ளார். இந்நிலையில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் வல்வெட்டித்துறை தீருவில் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ரகுபதி ஆனந்த் என்ற இளைஞரும் அந்த நாட்டவர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கனடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post