யாழில் 13 வயதுப் பாடசாலை மாணவன் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் அச்சுவேலிப் பகுதியில் 13 வயதுப் பாடசாலை மாணவன் ஒருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

அச்சுவேலி மத்திய கல்லூரியில் தரம் 8 இல் கல்வி கற்று வந்த சுமந்திரன் அபிஷனன் (வயது-13) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குறித்த மாணவன் உயிரிழந்துள்ளார்.
Previous Post Next Post