யாழில் இரு குழுக்களுக்கிடையில் கோஷ்டி மோதல்! இருவர் காயம்!!

யாழ்.துன்னாலை பகுதியில் இடம்பெற்ற கோஷ்டி மோதலில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துன்னாலை பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் நீண்ட கால முரண்பாடு நிலவி வந்த நிலையில், புதன்கிழமை (20) இரவு இரு குழுக்களும் மோதிக் கொண்டன.

மோதலில் இருவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post