யாழில் வெளிநாட்டிலிருந்து வந்தவர் கூலிப் படையைக் வைத்துத் தாக்குதல்! 3 மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரை!! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் இரு வீட்டாருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கட்டுவான் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

அப்பகுதியில் வசிக்கும் இரு வீட்டாருக்கு இடையில் , பாதை தொடர்பில் நீண்ட காலமாக முரண்பாடு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ஒரு வீட்டில் வெளிநாட்டில் இருந்து வந்த நபர் ஒருவர் தங்கி இருந்தார்.

அவர் தான் தங்கியிருந்த வீட்டாருக்கு ஆதரவாக வன்முறை கும்பல் ஒன்றினை கூலிக்கு அமர்த்தி , அவர்களுடன் முரண்பட்ட வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், வீட்டில் நின்ற இரு மோட்டார் சைக்கிளையும் வன்முறை கும்பல் தீக்கிரையாக்கி உள்ளது.

குறித்த வன்முறை கும்பல் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டு , வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டை தீக்கிரையாக்கி விட்டு தப்பி செல்ல முற்பட்ட வேளை பாதிக்கப்பட்ட வீட்டார் வன்முறை கும்பலை துரத்திய போது , அவர்கள் தப்பி செல்லும் போது ஒரு மோட்டார் சைக்கிளை கைவிட்டு சென்றுள்ளனர்.

அதனை வீட்டார் தீக்கிரையாக்கி உள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post