யாழில் தேர்தல் கடமையிலிருந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்!

யாழ்ப்பாணத்தில் தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் திடீரென உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று சற்று முன்னர் கோப்பாய் தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலயத்தில் தேர்தல் கடைமையில் ஈடுபட்டிருந்த பொலீஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் அராலி வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (வயது-34) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த பகுதியில் தேர்தல்

கடமையில் ஈடுபட்டிருந்த பொலீஸ் உத்தியோகத்தர் மலசலகூடத்திற்கு சென்று பல மணி நேரம் திரும்பாததையடுத்து கதவை திறந்து பார்த்த போது உயிரிழந்த நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post