பிரான்ஸ் La Courneuve சிவன் கோவில் பொலிஸாரால் முற்றுகை! ஒருவர் கைது!! (வீடியோ)

பிரான்ஸ் La Courneuve பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் அந் நாட்டுப் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இச் சம்பவம் நேற்று முன்தினம் 12.11.2024 ஆம் திகதி காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சுமார் 20 பேர் அடங்கிய பொலிஸ் குழு மற்றும் வருமான வரி சோதனை செய்யும் அதிகாரிகள் குழுவால் இம் முற்றுகை இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆலயத்தில் இடம்பெற்று வரும் மோசடிகள் குறித்து பல்வேறுபட்ட தரப்புக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளை அடுத்தே பிரான்ஸ் அரசின் வருமான வரி அதிகாரிகள் இவ் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பல மணிநேரங்கள் நீடித்த விசாரணை முடிவில் அர்ச்சனைச் சீட்டுக்களை விற்பனை செய்வதற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த கணக்காளர் மற்றும் விற்பனையாளர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் ஆலயத் தலைவர் உட்பட இருவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Previous Post Next Post