இரண்டு நாள்கள் மூடப்படும் மதுபானசாலைகள்!

பொதுத்தேர்தல் காரணமாக நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 14 ஆம் திகதி பொதுத்தேர்தல் காரணமாகவும், 15 ஆம் திகதி பௌர்னமி தினத்தை முன்னிட்டும் மதுபானசாலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தினங்களில் அனுமதிச்சட்டத்தை மீறும் மதுபானசாலைகள் மற்றும் ஏனைய சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் சட்டத்தை கடுமையாக நடைமுறைபடுத்துமாறு மதுவரித்திணைக்கள ஆணையாளர் நாயகம் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கிடையில், நிலுவையில் உள்ள மதுபான உரிமங்களை புதுப்பிப்பதற்கு வருமான வரியை செலுத்தாத நிறுவனங்களுக்கு இம்மாதம் 30ம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ள து.

இந்த நிறுவனங்களில் 04 நிறுவனங்கள் தொடர்பில் மதுவரித்திணைக்களம் அதிக கவனம் செலுத்தியுள்ளதுடன் அந்த நிறுவனங்களின் அனுமதிப்பத்திரங்கள் இடைநிறுத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Previous Post Next Post