முன்பகை காரணமாக வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்! (வீடியோ)

திருகோணமலையில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வச்சு தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவமானது இன்றையதினம் (07.11.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் உள்ள இலங்கைத்துறை பகுதியில் உள்ள வீடொன்றின் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலின் போது வீட்டின் உடைமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.முன் பகையின் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post