
ரொறன்ரோவில் அமைந்துள்ள வுட்சயிட் திரையரங்கிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த திரையரங்கில் தமிழ் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட இந்திய திரைப்படங்கள் அதிக அளவில் திரையிடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அண்மையில் மேற்படி திரையரங்கில் மர்ம பொருளொன்றை எரித்த சம்பவத்தில் இருவரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்தனர்.
அத்துடன், அண்மைய நாட்களாக இவ்வாறான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்றதுடன், காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.