பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த இளைஞனின் நெகிழ்ச்சியான செயல்!

இலங்கையில் பேரிடரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு விடுமுறைக்காக வந்த சுற்றுலாப் பயணி ஒருவரின் செயல் நெகிழச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அறுகம் குடாவிற்கு சுற்றுலா சென்ற சன்னி என்ற பிரித்தானிய இளைஞன், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை புனரமைக்க உதவியுள்ளார்.

மேலும் திகாமடுல்ல நிவாரண அறக்கட்டளை ஆர்வலர்களுடன் இணைந்து நீர்ப்பாசன மறுசீரமைப்புப் பணிகளுக்கு பெரும் ஆதரவு வழங்கியுள்ளார்.

அம்பாறையில் இருந்து தங்கள் பயணத்தைத் தொடங்கிய நிவாரண அறக்கட்டளை குழுவுடன் பல நாட்கள் தங்கியிருந்து, அவர் உதவிகளை மேற்கொண்டுள்ளார்.

அத்துடன் கெப்பட்டிபொல விதுரபொல கிராமத்தின் விவசாய நிலங்களுக்கு நீர் வழங்கும் கால்வாய்களை மீண்டும் மறுசீரமைக்கவும் அவர் உதவியுள்ளார்.

சுற்றுலா வந்த இடத்தில் மக்களுக்காக பிரித்தானிய இனைஞன் செய்த செயற்பாடு குறித்து பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post