
குடும்பம் ஒன்று புத்தாண்டு தினமான நேற்று வியாழக்கிழமை குறித்த உணவகத்துக்கு உணவருந்த சென்றுள்ளனர்.
இவ்வாறு சென்றவர்களுக்கு வழங்கிய நூடில்ஸ் உணவில் கரப்பான்பூச்சி இருந்தமை அவதானிக்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த விடயத்தை உணவக பணியாளர்களுக்கு எடுத்துக் கூறிய போது, அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.