யாழில் சோற்றுப் பானை விழுந்து 2 வயதுக் குழந்தை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் மணியந்தோட்டப் பகுதியில் அடுப்பில் இருந்த சோற்றுப் பானை குழந்தை மீது விழுந்ததில் இரண்டு வயதுப் பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.

இச் சம்பவத்தில் அதேயிடத்தைச் சேர்ந்த யசிந்தன் கஜலக்சி என்ற இரண்டு வயதுக் குழந்தையே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

யாழ்ப்பாணம் மணியம் தோட்டத்தில் வசித்து வரும் குழந்தையின் வீட்டில் அவரது தாயார் கடந்த 23 ஆம் திகதி நிலத்தில் மண்ணெண்ணெய் அடுப்பில் சோறு சமைத்துள்ளார்.

அப்போது அடுப்புக்கு அண்மையில் இந்த குழந்தையும் இருந்துள்ளது.குழந்தை எதிர்பாராத விதமாக அடிப்பினை காலால் உதைந்துள்ளது.

இதனால் அடுப்பில் கொதி நிலையில் இருந்த சோற்றுப் பானை குழந்தை மீது வீழ்ந்துள்ளது.

இதனால் குழந்தையின் உடம்பு முழுவதும் சுடு காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த குழந்தையை உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

இறப்பு தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Previous Post Next Post