உயிருக்குப் பயந்து இரவோடு இரவாக இடம்பெயரும் முல்லைத்தீவு மக்கள்! (வீடியோ)

காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் தங்களது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இரவோடு இரவாக முல்லைத்தீவு மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

முல்லைத்தீவு-ஒட்டுசுட்டான் முதல் மாங்குளம் வரையிலான பிரதான வீதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றன.

இந் நிலையில் கடந்த ஒரு வாரமாக காட்டு யானைகள் காட்டிலிருந்து மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகள் நோக்கி வருகை தருகின்றன.

இதனால் அப் பகுதி மக்கள் நிரந்தர வசிப்பிடங்களிலிருந்து இடம்பெயர்ந்து வேறு பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் அப் பகுதியில் பாடசாலைகளுக்கும், மேலதிக வகுப்புகளுக்கும் துவிச்சக்கரவண்டியில் செல்லும் மாணவர்கள் பெரும் அச்சத்தினை எதிர்நோக்கி வருகின்றனர்.

எனவே காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகம் காணப்படும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள குறைந்த அழுத்தம் கொண்ட மின்சார வேலிகளைப் போன்று ஒட்டுசுட்டான் பகுதிக்கும் அமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Previous Post Next Post