கொழும்பு சிறைச்சாலையில் சற்றுமுன் துப்பாக்கிச் சூடு!

கைதி ஒருவர் தப்பி ஓட முயற்சித்த போது சிறைக்காவலர்களால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு மகசின் சிறைச்சாலையிலேயே இத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச் சம்பவத்துக்குக் காரணமான கைதி ஒருவரும், பொலிஸ் அதிகாரியும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Previous Post Next Post