மிகப் பிரமாண்டமான கிறிஸ்மஸ் மரம் யாழில் திறந்து வைப்பு! (படங்கள்)

85 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் யாழ்ப்பாபணம், உரும்பிராயில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புனித மிக்கேல் தேவாலயத்தில் வைக்கப்பட்ட குறித்த கிறிஸ்மஸ் மரம் வண்ணமயமான மின் விளக்குகளால் அலங்கப்பட்டுள்ளது.

இம் மரத்தை புனித மிக்கேல் தேவாலயத்தின் பங்குத் தந்தை அருட்பணி ம.பத்திநாதர் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

குறித்த மரத்தை அமைப்பதற்கு இரும்புக் குழாய்கள், வைக்கோல் மற்றும் 1100 பிளாஸ்ரிக் தண்ணீர்ப் போத்தல்கள் என்பன பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பிரமாண்ட கிறிஸ்மஸ் மரத்தை அமைப்பதற்கு 15 பேர் கொண்ட குழு 10 நாட்கள் பணியாற்றியுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளாக அமைக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரத்தில் இந்த வருடம் அமைக்கப்பட்ட மரமே உயரமானது என்பது குறிப்பிடத்தக்கது. 
Previous Post Next Post