கிளிநொச்சியில் சிறுமி துஷ்பிரயோகம்! முஸ்லிம் வியாபாரியின் கடை தீக்கிரை!! (படங்கள்)

கிளிநொச்சிப் பகுதியில் 11 வயதுச் சிறுமியை புடவைக் கடை உரிமையாளரான முஸ்லிம் வியாபாரி ஒருவர் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குறித்த நபரை பொலிஸாரிடம் பிடித்துக் கொடுத்ததோடு அவரது புடவைக் கடையினையும் தீயிட்டுக் எரித்துள்ளனர். இச் சம்பவம் கிளிநொச்சி பரந்தன் பகுதியில், பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் சிறு புடவைக் கடை நடாத்தி வரும் நபர் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர். அத்துமீறி தனிநபரின் காணியைப் பிடித்து வியாபாரம் நிலையம் அமைத்து நடாத்தி வருகின்றார்.

எனவே இது தொடர்பில் கண்டாவளை பிரதேச செயலாளரினால் கடந்த 2017 ஆம் ஆண்டு கரைச்சி பிரதேச சபையின் செயலாளருக்கும், 2019 ஆம் ஆண்டு பிரதேச சபையின் தவிசாளருக்கும் குறித்த நபர் சட்டவிரோதமாக கடை நடாத்தி வருகின்றார். எனவே அவரின் வியாபார அனுமதி பத்திரத்தை நிறுத்துமாறு கோரி கடிதம் எழுதியிருந்தார். ஆனால் அக் கடிதத்திற்கு பிரதேச சபையினால் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இந் நிலையில் குறித்த நபர் 11 வயதுச் சிறுமியை அச்சுறுத்தி வன்புணர்வுக்குட்படுத்தியுள்ளார். இதனைப் பலரிடம் கூறிபோது எவரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இவரது நடவடிக்கையினை இரகசியமாக வீடியோ எடுத்த நபர் அதனை ஆதாரமாக பொலிஸாரிடம் கொடுத்து நடவடிக்கையினை மேற்கொண்டதோடு ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரின் கடையினையும் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.


Previous Post Next Post