புலிகளை அழிக்க இந்தியா உதவியது! பகிரங்கமாகத் தெரிவித்தார் இரா.சம்பந்தன்!! (வீடியோ)

தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் உதவி புரிந்தன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் 70 ஆம் ஆண்டு நிறைவு விழா நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போதே இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார்.

 அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் பல இலங்கை அரசாங்கத்துக்கு நிபந்தனை அடிப்படையில் உதவி புரிந்தன.

அந்த நிபந்தனை, தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்ட பின்பு நாங்கள் நியாயமான நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வைக் காண்போம் என்பதுதான்.

தற்போது அந்த வாக்குறுதிகளில் இருந்து தப்பிக்க முயற்சிக்கின்றார்கள். அதற்கு சர்வதேசம் இடமளிக்கக் கூடாது. சர்வதேசம் இடமளித்தால் அதன் அர்த்தம் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு அவர்களும் உதவுகின்றார்கள் என்பதுதான்.

அந்த நிலமை இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்கள் சிவில் அரசியல் உரிமைகள், பொருளாதார, சமூக, கலாசார உரிமைகள் தொடர்பிலான ஒப்பந்தங்களின் அடிப்படையில் எமக்கு உள்ளக சுயநிர்ணய உரிமை உண்டு.

அது மறுக்கப்பட்டால் அதற்கு வெளியக சுயநிர்ணய உரிமை உண்டு. இதை சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும் என்றும் என்றார்.

Previous Post Next Post