யாழ்.நொதேன் வைத்தியசாலைக்கு எதிராக முதியவர் வீதியில் படுத்திருந்து போராட்டம்! (வீடியோ)

யாழ்ப்பாணத்தில் இயங்கும் தனியார் வைத்தியசாலையான நொதேன் வைத்தியசாலைக்கு முன்பாக வீதியில் படுத்திருந்து முதியவர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து தெரியவருவதாவது,

நேற்றுக் காலை முதல் மதியம் வரை வைத்திய தேவைக்காக வைத்தியசாலையில் காத்திருந்த போதும் எவ்வித மருத்துவமும் செய்யப்படாத நிலையில் விரக்தியடைந்த முதியவர் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதன் பின்னர் அப் பகுதிக்கு வந்த பொதுமக்கள், மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் அவரை வீதியிலிருந்து அகற்றி வைத்தியசாலைக்கள் அழைத்துச் சென்றனர்

இதனால் அப் பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டதுடன், வாகன நெரிசலும் ஏற்பட்டது.
Previous Post Next Post