யாழில் காதலனால் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட பல்கலை மாணவி! (படங்கள்)

இரண்டாம் இணைப்பு!

யாழ்.பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவியே அவரது காதலன் என்று சொல்லப்படும் இராணுவச் சிப்பாயினால் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரையில் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட மாணவி, யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் 36 ஆவது அணி மாணவி என்றும் காதல் விவகாரமே இக் கொலைக்குக் காரணம் என்றும் தெரியவந்துள்ளது.
பேருவளப் பகுதியைச் சேர்ந்த றொசின் காஞ்சனா என்ற மாணவியும் அவரது காதலன் என்று சொல்லப்படுகின்ற இராணுவச் சிப்பாயும் பண்ணைக் கடற்கரையில் உரையாடிக் கொண்டிருந்த நிலையில் மாணவி, இராணுவச் சிப்பாயால் வெட்டிப் படுகொலை செய்த பின்னர் அவரை தள்ளி கடலில் வீசியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெட்டியவர் அங்கு சென்ற மக்களுடன் முரண்பட்ட நிலையில் அங்கு சென்ற சிறப்பு அதிரடிப்படையினர் அவரைப் பிடித்து யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

முதலாம் இணைப்பு!

யாழ்.பல்கலைக்கழக சிங்கள மாணவி ஒருவர் கழுத்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் இன்றைய தினம் புதன்கிழமை மதியம் மக்கள் நடமாட்டம் மிக்க பண்ணைக் கடற்கரையில் இடம்பெற்றுள்ளது.

கொலையாளி பரந்தன் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவச் சிப்பாய் எனவும் குறித்த பெண்ணுக்கும் இராணுவச் சிப்பாய்க்கும் இடையில் காதல் இருந்துள்ள நிலையில் இருவரும் அப் பகுதியில் நீண்ட நேரமாக உரையாடிக் கொண்டிருந்துள்ளனர்.

இந் நிலையில் திடீரென அவர் பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மாணவியைக் கொலை செய்து விட்டு கொலையாளி தப்பிச் சென்ற போது அப் பகுதியில் கடமையில் இருந்த விமானப் படை புலனாய்வுப் பிரிவினர் குறித்த கொலையாளியைத் துரத்திச் சென்று கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Previous Post Next Post