முகக் கவசங்களை உள்ளாடையாகப் பயன்படுத்திய உலக அழகி! (படங்கள்)

தற்போது மனித உயிர்களை காவு கொண்டு உலகத்தையே ஒரு அச்சநிலைக்கு உறைய வைத்துள்ளது கொரோனா என்ற வைரஸ்.

குறித்த வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவாமல் இருக்க முகக் கவசங்களையும், கையுறைகளையும் பயன்படுத்துமாறு உலக மக்களிடம் சுகாதார அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந் நிலையில், வைத்தியசாலையில் பாவிக்கப்படும் முகக்கவசங்களை மார்புக் கச்சைகளாக அணியும் புதிய சமூக வலைத்தள சவாலாக உருவாக்க முயன்ற ரஷ்ய உடற்கட்டழகியை நெட்டிசன்கள் சரமாரியாக விமர்சித்து வருகிறார்கள்.

சமூக ஊடகங்களில் அடிக்கடி ஏதாவது சலன்ஞ் உருவாகும். யாராவது ஒரு பிரபலம் நகைச்சுவையாக ஒன்ற செய்த, அது உலகம் முழுக்க வைரலாகும். அப்படி நினைத்தக் கொண்டோ என்னவோ, ரஷ்யாவின் உடற்கட்டழகியும், மொடலும், சமூக வலைத்தள பிரபலமுமான 29 வயதான யூலியா உசகோவ, அண்மையில் தனது சமூக ஊடகத்தில் கவர்ச்சிப் படமொன் பதிவிட்டார்.

அதில், வைத்தியசாலையில் பாவிக்கும் முகக்கவசங்களை மார்புக்கச்சையாக மாற்றி அணிந்தபடி காட்சியளித்தார். அத்துடன் அதை அணிபவர்களிற்கு சவாலும் விடுத்திருந்தார்.

ஆனால் அவர் நினைத்தபடி வரவேற்பு கிடைக்கவில்லை.பலரும் அவரை திட்டித் தீர்க்கிறார்கள். முகக்கவசங்கள் தட்டுப்பாடாக உள்ள நிலையில் இது பொறுப்பற்றது, வைத்தியத்துறையை அவமதிப்பது என கருத்திட்டுள்ளனர்.
Previous Post Next Post