கொரோனாத் தொற்றால் வரலாற்றில் முதன்முறையாக பிரான்ஸில் நடந்த சம்பவம்!

பிரான்ஸ் தற்போது ஒட்டுமொத்தமாக செயலிழந்த நிலையில், அனைத்து சுற்றுலாத்தலங்களும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் Lourdes மாதா தேவாலயமும் மூடப்பட்டுள்ளது. வரலாற்றில் முதன் முறையாக Lourdes தேவாலயம் மூடப்படுவதாக திருத்தந்தை Mgr Olivier Ribadeau Dumas அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பிரான்சை ஆக்கிரமித்துள்ள நிலையில் லூவர் அருங்காட்சியகம், ஈஃபிள் கோபுரம், Disneyland உள்ளிட்ட அனைத்து பொது இடங்களும் ஏற்கனவே மூடப்பட்டுள்ளது.

இந் நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணியுடன் Lourdes தேவாலயமும் மூடப்பட்டுள்ளது. Lourdes தேவாலயம் மூடப்படுவது வரலாற்றில் இதுவே முதன் முறை என அதன் திருத்தந்தை அறிவித்துள்ளார்.
Previous Post Next Post