யாழில் மத போதகருக்கு கொரோனா தொற்று! உறுதிப்படுத்தியது சுகாதார அமைச்சு!!

யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றுடைய இரண்டாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மத போதகர் ஒருவருக்கே இவ்வாறு கோரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மானிப்பாய் கிருஸ்தவ தேவாலய போதகர் ஒருவர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கடந்த 23ஆம் திகதி சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கே இவ்வாறு கோரோனா தொற்றுள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கோரோனா வைரஸ் தொற்றால் மேலும் 3 பேர் இன்று (ஏப்ரல் 1) புதன்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டுத் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 146ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது. அவர்களில் 17 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருவர் உயிரிழந்துள்ளார்.
Previous Post Next Post