இலங்கையில் எல்லைமீறும் கொரோனாத் தொற்று! அச்சத்தில் உறையும் மக்கள்!!

உலக நாடுகளில் வேகமாகப் பரவி இலட்சக் கணக்கான மக்களின் உயிர்களைப் பலியெடுத்த கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையில் தணிந்திருந்த நிலையில், அண்மைய நாட்களாக அதன் வேகம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

அந்தவகையில், கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 12 பேர் இன்று (ஏப்ரல் 28) செவ்வாய்க்கிழமை இரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 611ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது.

134 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர். 470 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை இலங்கையில் அண்மைய நாட்களில் சடுதியாக அதிகரித்த கொரோனாத் தொற்றினால் பல இடங்கள் முடக்கப்பட்டுள்ளது.

இக் கொரோனாத் தொற்றின் அதிகரிப்பினால் மக்கள் மத்தியில் அச்ச நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post