சுவிஸில் சுகாதார முறைப்படி முடிவெட்டும் யாழ்.தமிழருக்குக் குவியும் பாராட்டுக்கள்! (வீடியோ)

சுவிற்சர்லாந்தின் லுட்சேர்ன் மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மூடப்பட்டிருந்த சிகை அலங்கார நிலையங்கள் நேற்றைய தினம் திறக்கப்பட்டுள்ளன.

உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்திவந்ததால் உலகளாவிய ரீதியில் பல்வேறு செயற்பாடுகள் முடங்கியுள்ளன.
சுவிற்சர்லாந்திலும் கொரோனா தொற்று அச்சம் காரணமாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், சிகையலங்கார நிலையங்கள் என்பன கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டிருந்தவை நேற்றைய தினம் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சுவிற்சர்லாந்தின் லுட்சேர்ன் மாநிலத்தில் சிகையலங்கார நிலையங்கள் மீள திறக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வினோச் முடி திருத்தும் கடையின் உரிமையாளர் அருட்பிரகாசம் கருத்துத் தெரிவிக்கையில்,

நாம் எமது நிலையத்தில் சுகாதார முறைகளை கடைபிடித்தே பணியாற்றுகின்றோம். எமது நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தனித்தனியே பிரத்தியேகமான சீப்பை பயன்படுத்துவதோடு, அவர்களுக்கு முகக்கவசங்களையும் வழங்குகின்றோம். தொற்று நீக்கிகளை பயன்படுத்தி பொருட்களை சுத்தம் செய்து வருகிறோம். எமது பாதுகாப்பும் முக்கியம் என கருதுவதால் வாடிக்கையாளருக்கு முகச்சவரங்களை நாங்கள் செய்வதில்லை என்று தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post