யாழில் தொடரும் கொரோனா தொற்று பாதிப்பு! நடந்தது என்ன? (வீடியோ)

பலாலி தனிமைப்படுத்தல் முகாம்களில் மூவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமையால் அங்குள்ளவர்கள் மேலும் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே இன்று அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

சந்தேகத்திற்கு உரியவர்களை சோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கையின் ஊடாக பலாலியில் தடுத்துவைக்கப்பட்டிருந்த பத்துப்பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் போது அங்கு மூவர் அடையாளம்காணப்பட்டனர்.
இந்நிலையில் ஏனைய பத்துப்பேரிடமும் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளன. அதன் முடிவுகள் இன்று மாலை அல்லது நாளை வெளிவரும்.

அதேவேளை அங்கு குணங்குறிகள் அற்ற நிலையிலும் மூவரும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அங்குள்ளவர்கள் மேலும் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

நோய்த் தாக்கத்துக்கு உட்பட்டவர்களில் மூவரும் அரியாலைக்கு வந்திருந்த போதகருடன் நெருக்கமான தொடர்புகளை அடிக்கடி கொண்டிருந்தவர்கள். மானிப்பாயைச் சேர்ந்த போதகர் அடிக்கடி அரியாலை போதகரை சந்தித்து கலந்துரையாடி பழகியிருக்கின்றார்.

அதேபோல பாதிக்கப்பட்ட பெண் அரியாலை போதகருக்கு உறவுக்காரப் பெண் என்பதால் அடிக்கடி அவரும் சந்தித்து பழகியிருக்கின்றார். மற்றைய இளைஞர் அரியாலை தேவாலயத்திற்கு அண்மையில் வசிப்பவர் என்பதால் போதகரை அடிக்கடி சந்தித்து பழகியிருக்கின்றார்.

இவர்கள் மூவரும் ஏனையவர்களை விடவும் கூடுதல் நேரங்களை அரியாலை போதகருடன் செலவிட்டிருக்கின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அவர் தெரிவித்த கருத்துக்களின் முழுமையான இணைப்பு
Previous Post Next Post