பிரான்ஸ் அரசின் அறிவிப்பு! அதிர்ச்சியில் லாச்சப்பல் யாழ்ப்பாண வர்த்தகர்கள்!! (வீடியோ)

தலைநகர் பரிசில் அமைந்துள்ள தமிழர் வர்த்தக மையமான லாச்சபல், கொரோனா வைரஸ் பொதுமுடக்கம் காரணமாக பெரும் வருவாய் இழப்பினை சந்தித்து வருகின்றது.

99 வீதமான வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதோடு, மூன்று இறைச்சிக் கடைகள் மற்றும் சில பல்பொருள் அங்காடிகள் மட்டுமே திறந்துள்ளன. மே11ம் திகதிக்கு பின்னராக குறிப்பிட்டு சில தொழில்துறை நிறுவனங்கள் படிப்படியாக திறக்கப்படலாம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளதோடு,  யூலை நடுப்பகுதிக்கு பின்னரே உணவகங்கள், குடிப்பகங்கள், பெரும் நிகழ்வுகளுக்கான அனுமதியுள்ளது.

இந்நிலையில் மே11ம் திகதிக்கு பின்னராக படிப்படியாக திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள வணிக செயற்பாடுகள் தொடர்பில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்து கேள்விகள் நாடளாவிய ரீதியில் எழுந்துள்ளன.
சமூகஇடைவெளி பேணப்பட வேண்டிய நிலை காணப்படுவதனால், சலூன்களில் எவ்வாறு இதனைக் கையாளுவது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதேவேளை 40 சதுர மீற்றருக்கு குறைவான வணிக நிறுவனங்களில் சுகாதார நிலைமைகளை பேணுவது தொடர்பிலும் நாடாளாவிய ரீதியில் கேள்விகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் லாச்சபல் தமிழர் வர்த்தக மையங்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. மே 11க்கு பின்னராக கடைப்பிடிக் வேண்டிய சுகாதார நடைமுறைகள், மற்றும் வருவாய் இழப்பினை சந்தித்துள்ள நிறுவனங்களுக்கான அரசாங்க உதவிகளை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து தமிழர் வர்த்தக சங்கம் நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றதா என்பது பற்றியத் தெரியவில்லை.

பரிசின் புறநகர் பகுதிகளில் இருந்தே பெருவாரியான வாடிக்கையாளர்கள் லாசப்பலை நோக்கி படையெடுப்பது வழமை. மே 11க்கு பின்னராக பேணப்பட வேண்டிய பொதுநடமாட்டத்துக்கான நடைமுறை விதிகள் தொடர்பில் வரும் 15 நாட்களில் அரசாங்கம் அறிவிக்கவுள்ளது.

இதனை பொறுத்தே மக்களின் பொதுநடமாட்டம் இருக்கும் என்ற நிலையில், லாசப்பல் தமிழர் வர்த்தகம் முன்னரைப் போன்று இருக்காது என்பது மட்டுமல்லாது, நிலைமைகள் மீளுவதற்கு பல மாதங்கள் எடுக்கும் என்பது லாச்சபலுக்கு மட்டுமல்ல, நாடாளவியரீதியிலான நிலையாகவே காணப்படுகின்றது.
Previous Post Next Post