பிரான்ஸில் தமிழர்கள் அதிகம் வாழும் பிராந்தியம் ஆபத்துக்குள்! (வீடியோ)

தற்போதைய நிலவரத்தினை வெளிக்காட்டும் வகையில் மூன்று வர்ணங்களில் கொரொனா வைரஸ் தாக்கிய பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

முன்னதாக பிரதமர் தனது உரை கூறியதன் பிரகாரம் பிராந்திய ரீதியான பரவலைக் குறிக்கும் வரைபடம் பிரான்சின் சுகாதார அமைச்சர் Olivier Véran வெளியிட்டார்.

முதலில் இரு வர்ணங்கள்(பச்சை/சிவப்பு) என தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த வரைபடம் தற்போது செம்மஞ்சள் மேலதிகமாக சேர்க்கப்பட்டு மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு, செம்மஞ்சள், பச்சை ஆகிய நிறங்களில் குறிக்கப்பட்டுள்ள பகுதிகள் வைரசின் நிலைக்கு அமைய, பொதுமுடக்கம் நீக்கம் செய்வதற்குரிய நடைமுறைக்கு வழிகாட்டும் நிறங்களை அடையாளப்படுத்தும் வரைபடமாக வெளியிடப்பட்டுள்ளது.

வெளிவந்துள்ள தகவல்களின்படி பிரான்சின் பிராந்தியங்களில் தமிழர்கள் செறிந்து வாழும்  Ile-de-France பிராந்தியம் இன்னும் கொரொனா வைரஸ் பரவல் செறிவாக காணப்படுவதோடு வைத்தியசாலைகளில் அதிகளவு நோயாளிகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் பச்சை வர்ணத்தினால் குறிக்கப்பட்டுள்ள பகுதிகள் சில கட்டுப்பாட்டுடன் சுலபமாக மே 11க்கு உள்ளிருப்பிலிருந்து வெளியேறலாம்.

மேலும் செம்மஞ்சள் பகுதிகளுக்கு இன்னும் மேலதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் அதேவேளை, சிவப்புப் பகுதி மிகவும் ஆபத்தான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதி கடுமையான கண்காணிப்புடன், மிகவும் அதிகமான, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதோடு, இதில் சிவப்பாக பாரிஸ் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

பிற மாவட்டங்களில் மிக அதிகமான கொரொனா வைரஸ் பரவல் தொடர்ந்தும் அதிகரிப்பதால் பாடசாலை ஆரம்பங்களும் இந்தப் பகுதிகளில் தள்ளிப் போடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரைபடத்திலும் தமிழர்கள் செறிவாக வாழுகின்ற பாரிஸ் உட்பட  Ile-de-France இன் மாவட்டங்களும் சிவப்பாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

பின்வரும் சிவப்பாக அடையாளப்படுத்தப்பட்ட மாவட்டங்களில் கொரொனா வைரஸ் பரவல் தொடர்ந்தும் அதிகரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Paris (75)
Seine-et-Marne (77)
Yvelines (78)
Vosges (88)
Yonne (89)
Territoire de Belfort (90)
Essonne (91)
Hauts-de-Seine (92)
Seine-Saint-Denis (93)
Val-de-Marne (94)
Val-d'Oise (95)

மேலும் பிராந்தியவாரியான கணக்கெடுப்பில் Ile-de-France உட்பட பிரான்சின் வட-கிழக்குப் பகுதிகள் முழுவதும் சிவப்புப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் மேற்கண்ட மாவட்டங்கள் மிகவும் அதிக பாதிப்புக்குள்ளாகி உள்ளன. பொதுமுடக்கம் தொடர்பில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட தேசிய செயற்திட்டத்தில் வைரஸ் தொற்றின் நிலைவரத்துக்கு அமைய, கட்டுப்பாடுகளை விதிக்கின்ற அதிகாரம் மாவட்ட ஆட்சியகத்துக்கும், நகரசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் எதிர்வரும் மே 7ம் திகதி வரை இந்தப் பிராந்தியவாரியான கணக்கெடுப்பின் அடிப்படையில் மே 11க்கு பின்னராகவும் முடிவெடுக்கப்படும்.

மேலும் உள்ளிருப்பிலிருந்து வெளியேறல் என்பது பெரும் கேள்விக்குரிய விடயமாகவே அரசாங்கத்திற்கு உள்ளது. மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Previous Post Next Post