நடிகர் அஜித்தின் பிறந்தநாளில் டிடி கொடுத்த சர்ப்ரைஸ்! வைரலாகும் காட்சி!! (வீடியோ)

நடிகர் அஜித்தின் பிறந்த நாளை ரசிகர்கள் இன்று கொண்டாட காத்திருக்கும் நிலையில் பிரபல டிவி தொகுப்பாளினி டிடி அஜித்திற்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

டுவிட்டரில் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் தல அஜித்துக்கு இப்படி ஒரு ரசிகையா என்று வியந்து வருகின்றனர்.

இதேவேளை, அஜித் ரசிகர்கள் அவருடைய பிறந்த நாளை ஃபேஸ் புக், டுவிட்டரில் கொண்டாட தயாராகி வருகின்றனர்.
Previous Post Next Post