யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளதாவது,
யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் இன்று 76 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 75 பேருக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் ஒருவருக்கு மட்டும் தொற்று உள்ளமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
அவர் முழங்காவில் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து நேற்று மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டிருந்த ஜாஎலயைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஆவார்.
குறித்த பெண் கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி முழங்காவில் தனிமைப்படுத்தல் முகாமுக்கு கொண்டுவரப்பட்டிருந்தவர். அவருடைய சகோதரனுக்கு தொற்று ஏப்ரல் 11ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டிரு்நதது.
பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:

- போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டவர்கள் - 9 பேர்.
- போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - 7 பேர்.
- ஆதார வைத்தியசாலை தெல்லிப்பளை - ஒருவர்.
- வவுனியா பொது வைத்தியசாலை - 3 பேர்.
- முல்லைத்தீவு பொது வைத்தியசாலை - ஒருவர்.
- முல்லைத்தீவு வெலிஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - ஒருவர்.
- முல்லைத்தீவு புதுமாத்தளன் தனிமைப்படுத்தல் நிலையம் - 54 பேர்.