சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவனைக் காணவில்லை! பரீட்சை முடிவு காரணமா?

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பளை முள்ளியடியில் வசித்துவந்த அனோஜ் என்ற மாணவனை காணவில்லை என்று பளை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து புறப்பட்ட அவரைக் காணவில்லை என்று முறையிடப்பட்டுள்ளது.

பளை தர்மக்கேணி அ.த.க பாடசாலையில் கல்வி பயின்று க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்தவர் என்று குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

பரீட்சை முடிவுகள் வெளியாகிய நிலையில் அவர் காணாமல் போயுள்ளமை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த மாணவனை யாராவது கண்டால் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Previous Post Next Post