யாழ். அல்லைப்பிட்டியில் பாரிய தீ விபத்து! (வீடியோ)

அல்லைப்பிட்டி 02 ஆம் வட்டாரப் பகுதியில், பராசக்தி வித்தியாலயத்திற்கு முன்பாக உள்ள பராமரிப்பு அற்ற காணிக்குள் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த காணி பராமரிப்பு அற்று பற்றைக் காடாக இருந்த நிலையிலேயே இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்றிரவு (02)10.50 மணியளவில் ஏற்பட்ட குறித்த தீ விபத்தையடுத்து, யாழ்.மாநகர சபையின் தீயணைப்பு படையினருடன், பொலிஸார் மற்றும் மின்சார சபையினர் இணைந்து சுமார் ஒரு மணிநேரத்தின் பின் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இத் தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

தீ விபத்து ஏற்பட்ட காணியைச் சுற்றி குடியிருப்புக்கள் உள்ள போதிலும் எவ்வித சேதங்களும் இன்றி தீ கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதேவேளை அல்லைப்பிட்டி உட்பட தீவகத்தின் பல்வேறு பகுதிகளில் இவ்வாறான பராமரிப்பு அற்ற காணிகள் காணப்படுவதால், இதனால் அடிக்கடி தீ விபத்துக்கள் ஏற்படுவதுடன், டெங்கு நுளம்பு பெருக்கமும் அதிகமாக இருப்பதாக அப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எனவே இது தொடர்பில் வேலணை பிரதேச சபை, பராமரிப்பு அற்ற நிலையில் இருக்கும் காணிகள் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous Post Next Post