புங்குடுதீவில் 25 வீடுகள் மக்களிடம் கையளிப்பு! (படங்கள்)

புங்குடுதீவுவில் வீட்டுத் திட்டத்தின் கீழ் 25 வீடுகள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 14.8 மில்லியன் ரூபா நிதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட "புங்குடுதீவு வீட்டுத்திட்டம்" இன்று இராணுவத்தளபதியால் கையளிக்கப்பட்டது.

புங்குடுதீவு முதலாம் ஆம் வட்டாரத்தில் காணி இல்லாத வறிய குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, 25 குடும்பங்களிற்கு புதிதாக அமைத்துக் கொடுக்கப்பட்டது.

கடந்த 2017 ஆம் ஆண்டு நிர்மாணிக்க ஆரம்பிக்கப்பட்ட இந்த வீட்டுத்திட்டம், பல தடைகளின் மத்தியில், இராணுவத்தினரின் பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநர் எஸ்.எம் சார்ள்ஸ் மற்றும் இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி ரூவான் வணிகசூரிய உள்ளிட்டோர் பெயர்ப் பலகை திரைநீக்கம் செய்ததுடன், வீட்டுத்திட்ட வீடுகளை பயனாளிகளிடம் கையளித்தார்.

நிகழ்வில் மத தலைவர்கள், யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன், யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் காணி எஸ்.முரளிதரன், பிரதம செயலாளர் எஸ். பத்திநாதன், அரச அதிகாரிகள், யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஸ் சேனாரத்ன, கடற்படை அதிகாரி உள்ளிட்ட பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.








Previous Post Next Post