யாழில் இரவில் கூடிய இளைஞர்களால் ஏற்படவிருந்த அனர்த்தம்! தடுத்து நிறுத்தியது பொலிஸ்!!

கோப்பாய் பகுதியில் நேற்று இரவு சந்தேகத்துக்கு இடமான முறையில் இளைஞர்கள் ஒன்று கூடி உள்ளதாக பொலிஸாருக்கு இரகசியத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்ற போது குறித்த இளைஞர் குழு அவ்விடத்தில் இருந்து தப்பித்து செல்ல முற்பட்டுள்ளனர்.

இதன்போது பொலிஸார் துரத்தியதில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து இரும்புக் கம்பிகள் கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.


இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வாள் வெட்டு தாக்குதலுக்கு தயாராக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கோப்பாய் பொலிஸாரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து கூரிய ஆயுதங்களும் மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
Previous Post Next Post