யாழ்.பாடசாலை ஒன்றின் முன் மாதிரியான செயற்பாடு! குவியும் பாராட்டுக்கள்!! (படங்கள்)

கொரோனா வைரஸ் அபாயம் தற்காலிகமாக ஓய்ந்துள்ள நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளது.

இருந்தும் அனைத்துப் பாடசாலைகளிலும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் மாணவர்கள் கைகளைக் கழுவுவதற்காக அனைத்துப் பாடசாலைகளிலும் தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றது.

இதில் யாழ்.உடுவில் மகளிர் கல்லூரி வித்தியாசமான முறையில் பிளாஸ்டிக் கான்களைக் கொண்டு கை கழுவும் தொட்டிகளை அமைத்துள்ளது.

இப் பாடசாலையின் முயற்சி சமூகவலைத்தளங்களில் பெரிதும் பாராட்டுக்களைக் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post