 வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கி மரக்கறி ஏற்றியவாறு பயணித்த கப் வாகனம் குடைசாய்ந்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கி மரக்கறி ஏற்றியவாறு பயணித்த கப் வாகனம் குடைசாய்ந்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்காவில் பகுதியில் ஏ-9 வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. வேக கட்டுப்பாட்டை இழந்த குறித்த வாகனம் வீதியை விட்டு விலகியதில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
 


