யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவருக்குக் கொரோனாத் தொற்று!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஏழாம் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த கடற்படைச் சிப்பாய் ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று காலை கண்டறியப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து அண்மையில் வீடு திரும்பிய அவர், கடமைக்காக யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7 ஆவது நோயாளர் விடுதியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்குச் சந்தேகத்தின் அடிப்படையில் அவரது பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

முதல் இரண்டு தடவைகள் அவருக்குக் கொரோனாத் தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்தது. எனினும் மூன்றாவது பரிசோதனையில் அவருக்குக் கொரோனா வைரஸ் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post