பிரான்ஸில் பெண்கள் நிர்வாணமாகப் போராட்டம்!

இன்று நண்பகலின் போது ஜனாதிபதியின் எலிசே மாளிகை முன்பாக பெண்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Femen அமைப்பைச் சேர்ந்த மூன்று பெண்கள், புதிய அமைச்சரவையை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் ஒருவரின் உடலில் "வாக்குறுதியை கொன்றுவிட்டனர்" என எழுதியிருந்தார். மற்றுமொரு பெண் "கெட்டவர்களின் சபை" என எழுதியிருந்தார்.


மூன்று பெண்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். புதிய அமைச்சரவை இன்று முதன்முறையாக கூடுவதற்காக தயாரானபோது இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது.
Previous Post Next Post