மண்டைதீவு கண்ணகை அம்மன் ஆலய ஊர்வலத்துக்குச் சுகாதாரத்துறை தடை!

மண்டைதீவு பூம்புகார் அருள்மிகு கண்ணகை அம்மன் ஆலயத்தில் வருடாந்தம் நடைபெறும் ஊர்வலத்துக்கு இவ் வருடம் சுகாதாரத்துறையினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 03.07.2020 ஆம் திகதி நடைபெற இருந்த குறித்த ஊர்வலத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஊர்வலம் தவிர்ந்த ஏனைய அபிஷோக ஆராதனைகள் அன்றைய தினம் நடைபெற்று, அம்பாள் உள் வீதி, வெளிவீதி வலம் வருவதுடன் அன்றைய நிகழ்வுகள் யாவும் நிறைவுபெறும் என ஆலய பரிபாலன சபையினர் அறிவித்துள்ளனர்.


அத்துடன் 06.07.2020 ஆம் திகதி நடைபெறவிருந்த வருடாந்த பொங்கல் விழா மற்றும் தீ மிதிப்பு நிகழ்வுகள் தவிர்ந்த ஏனைய அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஆலய உற்சவத்திற்கு 50 அடியவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், ஆலயத்துக்கு வரும் அடியவர்கள் கட்டாயமாக சுகாதார விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் ஆலய பரிபாலன சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
Previous Post Next Post