போதையின் உச்சம்! மலசலகூடத்துக்குள் பெண் மீது பாலியல் பலாத்கார முயற்சி!! (படங்கள்)

மட்டக்களப்பு வாகரையைச் சேர்ந்த குடும்பப் பெண்ணை பலாத்காரத்திற்கு உட்படுத்திஇ கொலை செய்ய முயற்சித்த நபரை பொதுமக்கள் பிடித்து நையப் புடைத்து வாழைச்சேனை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் வாழைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள பெண்கள் மலசல கூடத்தினுள் சென்ற பெண்ணை அவதானித்த நபர், அவரை பின் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.

வாகரை பால்சேனையை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான 23 வயதான குடும்பப் பெண்ணொருவரே வாழைச்சேனைக்கு பொருட்கள் வாங்க வந்த சமயத்தில் இந்த அனர்த்தத்தை சந்தித்தார்.


பெண் மலசல கூடத்திற்குள் நுழைந்ததும், சுமார் 22 வயது மதிக்கத்தக்க பிறைதுறைச்சேனையை சேர்ந்த முஸ்லிம் இளைஞன் ஒருவன் பின்தொடர்ந்து சென்று, பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார். இதன்போது இருவருக்குமிடையில் மோதல் ஏற்பட்டது.

காமுகனை அந்த இளம்பெண்ணும் தாக்கியுள்ளார். உரத்த குரலில் உதவிக்கு ஆட்களையும் அழைத்துள்ளார். எனினும் அந்த பகுதியில் ஆட்களிருக்கவில்லை. பெண்ணை தாக்கி, அவரது துப்பட்டாவினால் கழுத்தை நெரித்துள்ளார்.

சத்தம் கேட்டு, அயல்வீட்டிலிருந்த பெண்ணொருவர் தனது கணவரிற்கு தகவல் தெரிவித்தார். அவரது கணவர் இன்னொருவருடன் வந்து, கதவை தட்டியபோது, போதை இளைஞன் எட்டிப்பார்த்து, வயிறு வலிக்கிறது, அவசரம் என அப்பாவியாக கூறி கதவை மீண்டும் தாளிட்டான்.


எனினும் சந்தேகமடைந்த இருவரும் கதவை எட்டி உதைந்தனர். இளம்பெண் வாயில் நுரைதள்ளியபடி மயக்கமடைந்திருந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.

போதை ஆசாமி நையப்புடைக்கப்பட்டான். பாதிக்கப்பட்ட பெண் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.


குறித்த இடத்திற்கு மட்டக்களப்பு தடயவியல் பொலிசார் வருகைதந்து விசாரணைகளை மேற்கொண்டனர். அண்மையில் பிறைதுறைசேனையில் வயோதிபப்பெண் கொல்லப்பட்ட விவகாரத்தில் பொலிசாரால் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்ட இளைஞனே இந்த கொலை முயற்சியில் ஈடுபட்டான். கைதானபோது இளைஞன் போதைப்பொருள் பாவித்திருந்தான்.

குறித்த பொது மலசல கூடமானது பாதுகாப்பற்ற இடத்தில் இருப்பதுடன் பழுதடைந்த நிலையில் காணப்படுவதாகவும் அதனை பொருத்தமான இடத்தில் அமைத்து தர கோறளைப்பற்று பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்கின்றனர்.

அந்த மைதானம் பிரதேசசபைக்குரியது. அங்கு காவலாளி இல்லை. இரவில் போதைப்பொருள் பாவிப்பவர்கள் கூடுவது குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post