(02 ஆம் இணைப்பு) பிரான்ஸில் தீப்பிடித்து எரியும் தேவாலயம்! (வீடியோ)

மேற்கு பிரான்ஸ் நகரமான நாண்டேஸில் உள்ள தேவாலயத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாக உள்ளூர் தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது.

15 ஆம் நூற்றாண்டின் கட்டப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தேவாலயத்திற்குள் இருந்து புகை வெளியே வருவதை உள்ளூர் ஊடகங்கள் காட்டியது. பாரிஸில் உள்ள மற்றொரு வரலாற்று சிறப்பு மிக்க நோட்ரே டேம் தேவாலயத்தில் ஏற்பட்ட பெரிய தீ விபத்துக்குள்ளான ஒரு வருடத்திற்குப் பிறகு இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


நாண்டேஸ் தேவாலயத்திற்கு எதிரே உள்ள பேக்கரியில் பணிபுரியும் சிசிலி ரெனாட் என்ற பெண், தீ விபத்து குறித்து சனிக்கிழமை அதிகாலை தீயணைப்பு சேவைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தேவாலய கட்டிடத்திற்குள் பெரும் தீப்பிழம்புகளைக் கண்டதாக சிசிலி ரெனாட் கூறினார். இது ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இது மிகவும் வருத்தமாக இருக்கிறது என அவர் கூறினார்.

நாண்டேஸ் தேவாலயம் தீப்பிடித்தது இது முதல் முறை அல்ல. 1944ல் இரண்டாம் உலகப் போரின்போது இது ஓரளவு அழிக்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தீ அதன் கூரையை முற்றிலுமாக அழித்தது. இது இறுதியாக 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கட்டப்பட்டது.

(முதலாம் இணைப்பு) பிரான்ஸில் தீப்பிடித்து எரியும் தேவாலயம்!



Previous Post Next Post