
Nantes நகரில் தேவாலயம் ஒன்று தீ பற்றி எரிந்து வருகிறது. தேவாலயத்தின் மேற்கூரைப் பகுதியில் இருந்து கரும் புகைகளும் தீப்பிழம்புகளும் மேலெழுந்து காணப்படுவதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளன.
15 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட Saint-Pierre-et-Saint-Paul de Nantes தேவாலயமே இந்த விபத்தில் சிக்கியுள்ளது.
உடனடியாக அங்கு தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். சில சாலைகளும் மூடப்பட்டுள்ளன. இன்று காலை 7.44 மணியளவில் தீ பற்றியுள்ளது.
இதே தேவாலயம் முன்னதாக 1972ம் ஆண்டிலும் தீவிபத்தில் சிக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.